பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு சலுகை வழிமுறைகளை அறிவித்தது மத்திய வங்கி!

Wednesday, March 8th, 2023

தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகளை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி வீதங்கள், தொழில்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலந்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் கொடுகடன் வசதிகளை மறுசீரமைத்தல், மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இந்தத் திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.

இந்தச் சலுகைகள், சுற்றுலாத்துறை, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழில்நுட்பம், ஏற்பாட்டுச்சேவை வழங்குநர்கள், போக்குவரத்து, பாடசாலை வேன் சேவை வழங்குநர்கள், பார ஊர்திகள், சிறிய பொருள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் அத்துடன் தனியார் துறை ஊழியர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட துறைகளின் பல சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு பெருமளவில் உதவியளிப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: