பொருளாதார சவாலில் இருந்து மீட்டு, போட்டி நிறைந்த பொருளாதாரத்தை நோக்கி செல்ல வேண்டுமாயின் நாட்டின் மனித வளங்கள் அதற்காக அணித்திரள வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, October 5th, 2023

நாட்டின் தற்போதைய பொருளாதார சவாலுக்கு மத்தியில் நாட்டை வீட்டு செல்வதா, இல்லையா என்பதை அறிவார்ந்த மனித வளங்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இலங்கையை தற்போதைய பொருளாதார சவாலில் இருந்து மீட்டு, போட்டி நிறைந்த பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் நாட்டின் மனித வளங்கள் அதற்காக அணித்திரள வேண்டும்.

EPF, ETF நிதியங்கள் புதிய சுதந்திர அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும்; பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு

அடுத்த ஐந்து வருடங்களில் உலகில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பது சர்வதேச நிலைமையை அவதானிக்கும் போது தெரியவருகின்ற விடயமாக உள்ளது.

அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட எதிர்காலத்தில் பொருளாதார சவால்களுக்கு உள்ளாகலாம்.

இதனால், தற்போது பட்டத்தை பெறுவோர், இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இலங்கையில் 450க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன.அந்த தொழில் பயிற்சி நிலையங்களை பல்கலைக்கழங்களாகவும் கல்வியல் கூடங்களாகவும் மாற்ற வேண்டும்.

இதன் மூலம் தொழில் நிபுணத்துவம் உள்ள குடிமக்களை நாட்டிற்குள் உருவாக்கலாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது

000

Related posts: