பொருளாதார இலாபத்தை அரசு இழக்கக்கூடாது – மத்திய வங்கி ஆளுநர் !
Saturday, March 24th, 2018
பொருளாதார இலாபத்தைத் தியாகம் செய்யக்கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டிலுள்ள அரசியற் சூழ்நிலை காரணமாக எங்களுக்குக் கிடைத்த பொருளாதார இலாபத்தை அரசு தியாகம் செய்து விடக்கூடாது. அரசின் பொருளாதாரம் மெதுவாகவே வளர்ச்சியடைகின்றது. இப்பொழுது நிலமை சீராக்கப்பட்டுள்ளது. அதன் வளர்ச்சியை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆண்டு நாங்கள் பெற்ற வெளிநாட்டு ஏற்றுமதி வருமானம் ஆகக் குறைந்த அடி மட்டத்திலிருந்தே பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எங்களின் வெளிநாட்டு ஏற்றுமதி இதைப் பார்க்கிலும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும் நாங்கள் எங்கள் இலங்கை நோக்கிய சரியான திசையிலேயே சென்று கொண்டிருக்கின்றோம். குறுகிய கால முதலீடுகளைப் பற்றி யோசிக்காமல் ஏற்றுமதிகளைப் பற்றியே அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.
பொருளாதாரம் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் அவர்கள் உடம்பில் ஓடும் இரத்தம் போன்றது. அரசியல்தான் அதில் பெரிய பூதகரமாக எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்நிய செலாவணி 2016 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து 2017 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியுற்றுள்ளதுடன் குறைந்த காலப் பரிமாற்றங்கள் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்தமையை நாட்டின் பொருளாதார வளர்ச்சியாகக் குறிப்பிடமுடியும் என்றார்.
Related posts:
|
|
|


