பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே Petya வைரஸின் நோக்கம்!
Tuesday, July 4th, 2017
உலகெங்கும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துவதே புதிய Petya இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணினிகளின் செயற்பாட்டை முடக்கும் புதிய வகை Ransomware இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஊடுருவல் மூலம் முடக்கிய கணினியை மீண்டும் செயற்பட வைக்க பிணைத்தொகை கேட்பது என்பது வெறும் கண்துடைப்பு. பாதிக்கப்பட்ட கணினியை மீண்டும் செயற்படச் செய்ய பிணைத்தொகை கோரும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களின் நோக்கம் என
யூரோபோலின் சைபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஜேக் வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
Related posts:
டெங்கு நுளம்பு ஒழிப்பு பணிக்கு மேலும் 1000 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்!
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு...
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையிர் கடமையில் * ஜனாதிபதியின் விச...
|
|
|
பல்கலைக்கழகங்கள் மீளத் திறப்பது மீண்டும் ஒத்திவைப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ...
வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தாருங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு...


