பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவர் பதவி விலகல்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது பதவி விலகலை அறிவித்துள்ளனர்.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உப தலைவர் உதேனி விக்ரமசிங்க மற்றும் அதன் உறுப்பினரான மொஹான் சமரநாயக்க ஆகியோர் இவ்வாறு பதவி விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தங்களது பதவி விலகல் கடிதத்தை அவர்கள், நிதியமைச்சுக்கு அனுப்பியுள்ளனர்.
முன்னதாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமென அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த இருவரும் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்றுக் கொண்டனர்.
எனினும், பின்னர் இடம்பெற்ற ஆணைக்குழு சந்திப்பு ஒன்றின் போது கடந்த காலத்தை கணக்கில் எடுத்து விதிக்கப்படும் மின்சார கட்டண அதிகரிப்பை ஏனைய உறுப்பினர்களுடனும் இணைந்த இந்த இருவரும் ஆட்சேபித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிலதினங்கள் மின்வெட்டு இருக்கும்!- மின்சார சபை
தரமற்ற பழங்கள் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை - யாழ். பாவனையாளர் அதிகாரசபை!
பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட மு...
|
|