மேன்முறையீடு தொடர்பாக உள்ளூராட்சி தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவால் மீள்பரிசீலனை!

Thursday, July 21st, 2016

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவால், வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்துள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் மீள்பரிசீலனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் மனு தாக்கல் செய்துள்ளவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவை தொடர்பில் நியாயமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஐந்து உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் - பொது மக்களிடம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி கோரிக்கை!
இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் - விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மஹிந்த ரா...
இடைக்கால குழுவை நியமிப்பதற்கான முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழுத்தம் பிரயோகி...