பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை – தெல்லிப்பளையில் உணவு சட்டங்களை மீறிய பலருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அபாரதம்!
 Friday, September 22nd, 2023
        
                    Friday, September 22nd, 2023
            
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் நீண்ட கால காலவதி திகதி முடிவுற்ற மற்றும் தவறான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேலருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் 6 பேருக்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள யூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஒரு வருட காலப்பகுதியும் குறித்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட அனைத்து பைக்கற்றுகளிலும் முனகூட்டியே அச்சிடப்பட்ட ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி இடப்பட்டு தயாரிக்கப்பட்ட யூஸ் 16 குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
அவை அனைத்து யூஸ் பக்கற்றுக்களும் அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சகல யூஸ்களையும் மீளபெற்று அழிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி, மேலதிக சுகாதார மருத்துவ அதிகாரி ,மேற்பார்வை பொது சாகாதார பரிசோதகர் ஆகியோரின் வழிகாட்டலில் அளவெட்டி, தெல்லிப்பழை, மாவிட்டபுரம், மல்லாகம் மற்றும் கீரிமலை பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் வழக்குகளை இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
“குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதி திகதி இடக்கூடிய பைக்கற் யூஸ்கள் ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு குடாநாட்டின் பல இடங்களில் விற்பனை செய்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் மாத்திரபமின்றி நீண்ட கால நோக்கில் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படும் அபாய நிலை சுட்டிகாட்டப்படுகின்றது என்று நீதிமன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        