பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது – சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவிப்பு!
Saturday, July 25th, 2020
தேர்தல் காலத்தின்போது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
பிரசாரக் கூட்டங்களில் மற்றும் வாக்குச் சாவடிகள் நேரடியாக நுழைந்து நபர்களை கைது செய்யவும், வழக்குத் தொடரவும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படுள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டு குறித்த அதிகாரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னிலையில் ஆயரானார் அரியநேத்திரன்!
20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் - அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்ப...
பாடசாலை கல்விக் கட்டமைப்புக்களில் மாற்றத்தை கொண்டுவர புதிய திட்டம் - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரி...
|
|
|


