பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியீடு!

நாடளாவிய ரீதியில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவு (அத்தியாயம் 40) இன் படி நேற்று (ஜூலை 21) இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இராணுவம், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை சுற்றி வளைத்து, ஜனாதிபதி செயலக நுழைவாயிலை ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றினர்.
அத்துடன் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை இராணுவத்தினர் அப்புறப்படுத்தியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் பொலிஸாரால் போராட்டத்தில் ஈடுபட்ட கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிக்கள நிலையத்தின் பரீட்சை 26ஆம் திகதி ஆரம்பம்!
புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!
நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
|
|