அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய பொறிமுறை!

Sunday, July 7th, 2019

சர்வதேச பயங்கரவாத அமைப்பு உட்பட அடிப்படைவாத மற்றும் மதவாத அமைப்புகளினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக இராணுவத்தினரால் புதிய பொறிமுறை ஒன்று தயாரிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்பேரில் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த பொறிமுறையின் பணிகள் வடக்கு மாகாண இராணுவ கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் வழிநடத்தப்படுகின்றன.

பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயற்பாட்டு திட்டத்தின்கீழ் இந்தப் பொறிமுறைய தாயரிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இவ்வாறானதொரு பொறுமுறையை உருவாக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இராணும், கடற்படை, விமானப்படை முதலானவற்றை உள்ளடக்கிய 100 பாதுகாப்புத் தரப்பினருக்கு விசேட இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: