“ஆவா” குழு தொடர்பில் தகவல் வெளியிட்டார் சட்ட ஒழுங்கு அமைச்சர் !

Tuesday, November 15th, 2016

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை புரிந்து வருவதாக கூறப்படும் ஆவா குழுவில் மொத்தமாக 62 பேர் இருப்பதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஆவா குழுவில் 62 பேர் இருக்கின்றனர். இதில் 38 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கையாளும் வாள் ஒன்று பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதுடன், குறித்த வாளினை போன்று ஏனைய வாள்கள் நாட்டில் உருவாக்கப்படுகின்றன. அதுமாத்திரமின்றி இவர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் குற்றச்செயல்கள் புரிவதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  இது தொடர்பான மேலதிக  விசாரணைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்..

இதேவேளை இராணுவத்திற்கும் ஆவா குழுவிற்கும் தொடர்புள்ளதா? என அனுரகுமார திசாநாயக்க கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இராணுவத்திற்கும் ஆவா குழுவுக்கும் நேரடியாக தொடர்பு இல்லாத போதும், இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர் ஒருவர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் எனவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

asd1

Related posts: