பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் – அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியானது!

Thursday, February 8th, 2024

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைச் சட்டம் எனும் விடயத்துக்குப் பின்னர், 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படுவதாக குறித்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளும் பொறுப்புகளும் எனும் தலைப்பின் கீழ், ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலகத்தால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: