பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுக்கவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது – பிரதமர் தெரிவிப்பு !

பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் தினேஷ் குனவர்தன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம – பொரலுகொட பகுதியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இந்த நிதி நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் நீதி மற்றும் சமத்துவத்தை பாதுகாக்கவே நாட்டில் அவசரகாலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாவும் வேறு எந்த காரணங்களுக்காகவும் அல்ல எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
0000
Related posts:
சீனா செல்லும் 16 அதிபர்கள்!
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்!
நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை!
|
|