ஊரடங்கு சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை – சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Friday, May 1st, 2020

எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமையவே ஊரடங்குச் சட்ட நீடிப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவை வழங்கும் தரப்பினருக்கு நேற்றையதினம் வரையில் வழங்கப்பட்டிருந்த ஊரடங்கு அனுமதிப்பத்திரம் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் மே மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கும் என ஊடகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திர கால வரையறை நீடிப்பானது ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதாக அர்த்தப்படாது எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts:


ஓய்வூதியத்தை சரியான நேரத்தில் வழங்க விரைவான திட்டம் தயாரிக்கப்படும் - அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் த...
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - ஆணையாளர் நாயகம் அறிவ...
கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் - பல்கலைக்கழக பேராசியர்கள் ...