அரசின் கட்டுப்பாட்டு விலை நடைமுறையால் யாழ்ப்பாணத்திலும் சீனி விற்பனை இடைநிறுத்தம்!

Saturday, February 4th, 2017

சீனி மற்றும் பயறு இரண்டையும் அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் விற்க முடியாதுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்தில் சீனி விற்பதைத் தங்காலிகமாக நிறுத்திக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக வணிகர் கழகத்துக்கு அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து வர்த்தகர்கள் தெரிவித்ததாவது,

அரசு நிர்ணயித்த விலையின்படி சீனியைக் கொள்வனவு செய்யும் விலைக்கே வர்த்தகர்களுக்கு விற்க வேண்டும். அவ்வாறு விற்றால் வடக்கிற்கு கொண்டு வரும் செலவை யார் ஈடு செய்வது? எமக்கு இலாபமும் இல்லையே. இலாபம் 5சதமும் இல்லாது எதற்காக நாங்கள் சீனியை இறக்குமதி செய்ய வேண்டும்.  சீனியை நாங்கள் கொள்வனவு செய்து விற்பனை செய்வதற்கு அரச இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் அல்லது நாங்கள் விலையை அதிகரித்துச் சீனியை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் இந்த இரண்டு விடங்களில் ஒன்றை அரசு செய்ய வேண்டும். பயறும் இதே நிலையில்தான் உள்ளது. ஏற்கனவே வவுனியா வர்த்தகர்கள் சீனி இறக்குமதி மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ளனர். என்றனர்.

ht702

Related posts:


பரீட்சைகள் நடைபெறும் இறுதி தினம் தொடர்பான முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் - அமைச்சர் பந்துல குணவ...
யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி : சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக பேணுவதுதான் மக்கள் சமூகத்த...
எதிர்வரும் 1 ஆம் திகதிமுதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க திட்டம் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ர...