பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, August 7th, 2021

பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்படி பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முறையற்ற வகையில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் போது, பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் பொதுபோக்குவரத்து சேவையை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது.

அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் போக்குவரத்து வசதிகளைக் கருதியே தொடர்ந்தும் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுவிட்டனர் - வைத்திய கலாநி...
விவசாய, கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி - கமநல காப்புறுதி சபை...
கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுகாதார அதிகாரிகளின் முடிவுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம்...