பேருந்தை தீவைத்து எரிக்க முயற்சி – அச்சுவேலியில் பதற்றம்!
Tuesday, August 14th, 2018
அச்சுவேலி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ வைத்து எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம் அச்சுவேலி வடக்கில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தெர்டர்பில் தெரியவருவதாவது – அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து மீது , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பேருந்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், பேருந்தை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். பின்னர் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த பேருந்து உரிமையாளரையும் அக்குழுவினர் தாக்குவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|
|


