பேருந்துகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அறிமுகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளையும் ஒழுங்குபடுத்தும் புதிய டிஜிட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அனைத்து பேருந்துகளையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் வசதி, வீதி அனுமதி வழங்கும் போது முன்பு வழங்கப்பட்ட புத்தகத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் அட்டை என்பன அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளுடன் இருவர் கைது!
ஈரானிய ஜெனரல் மீது தாக்குதல்: அமெரிக்க – ஈரான் இடையே போர்!
கொரோனா தொற்று: இலங்கையில் 21 பேர் பூரண நலம் பெற்றனர்!
|
|