பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் மருத்துவ பயிற்சிகள் பெறுவதில் சிக்கல்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி வைத்திய சேவை பிரிவு மாணவர்களுக்கு கண்டி அல்லது பேராதனை வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படாமையினால் அந்த மாணவ மாணவிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக உதவி வைத்திய சேவை கூட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ பயிற்சிக்காக மாணவர்களுக்கு தேவையற்ற பணச் செலவு மற்றும் காலச் செலவு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா கூறினார்.
மாணவர்கள் தற்போது மருத்துவ பயிற்சிக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக கூறும் தர்மகீர்த்தி ஏபா, அந்தப் பயிற்சிக்காக வரையறுக்கப்பட்ட சில குழுவினருக்கே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பில் சரியான தீர்வொன்று வழங்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்திய சாரதிகளை அழையுங்கள் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோர...
விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வரி விலக்கு!
டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்க...
|
|