பெரும்போக நெற் செய்கைக்கு 3 மாதங்களில் 3 ஆயிரத்து 559 பவுசர் எரிபொருள் பகிர்ந்தளிப்பு – விவசாய அமைச்சு தகவல்!

Wednesday, December 28th, 2022

இம்முறை பெரும்போக நெற் செய்கைக்காக கடந்த செப்டெம்பர் மாதம்முதல் டிசம்பர் (11) வரை 6,600 லீற்றர் கொள்ளளவுள்ள 3,559 பவுசர் எரிபொருள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் செப்டெம்பர் மாதத்தில் 866 எரிபொருள் பவுசர்களும் ஒக்டோபர் மாதத்தில் 1,587 பௌசர்களும் நவம்பர் மாதத்தில் 1004 பௌசர்களும் டிசம்பர் (16) வரையிலான

காலப்பகுதியில் 102 பவுசர்களுமாக 3,559 பவுசர் எரிபொருள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, பயிர்ச்செய்கைகளுக்கென விவசாயிகளுக்கு மண்ணெண்ணெயும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

6600 லீற்றர் கொள்ளளவுள்ள 151 பவுசர் மண்ணெண்ணெய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளளது.

பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தொடர்பிலான முன்னேற்றம் சம்பந்தமாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்பயிர்ச்செய்கையை சாத்தியமானதா முன்னெடுத்துச் செல்லும் வகையில் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெயை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கிணங்க இது தொடர்பான நடவடிக்கைகளை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: