பெண் ஊழியர்கள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் – வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விசாரணை குழுவின் அறிக்கையை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்க நடவடிக்கை!

நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதனைப் பெற்றுக் கொண்ட பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர் உயிரின உற்பத்திக்கு சீனா விருப்பம்!
உலகில் பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மஹிந்த ராஜப...
வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் வரை இழப்பு !
|
|