வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் வரை இழப்பு !

Sunday, November 5th, 2023

நாட்டில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு ஆண்டுக்கு 17 முதல் 20 பில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவைக்கப்பட்டுள்ளது

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக  விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும், வன விலங்குகள் சேதம் காரணமாக வருடாந்தம் 31,000 மெற்றிக் தொன் மரக்கறிகள் மற்றும் பழங்கள் இழக்கப்படுவதாகவும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களைத் தடுப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து உத்திகளும் தோல்வியடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 200 மில்லியனைத் தாண்டியுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: