மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஆரம்பம்
Saturday, February 3rd, 2018
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகளில் எதிர்காலத்தில் காணிகள் கையளிக்கப்படும் போது மீள்குடியேற்ற செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் இதுவரை மீள்குடியேற்றம் செய்வதற்குப் பதிவுகள் மேற்கொள்ளத் தவறியவர்கள் 28.02.2018 ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என பிரதேச செயலாளர் ப.ஜெயராணி அறிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை - சிங்கப்பூர் பிரதமர்!
நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவ...
வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டால் மாற்று வழியைக் கையாள வேண்டும் - சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
|
|
|


