உள்ளூராட்சி சபைகளின்  உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 சதவீதத்தால் குறைக்க முயற்சி!

Tuesday, December 19th, 2017

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 சதவீத்தால் குறைப்பதற்கான முயற்சியை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

தற்போது உள்@ராட்சி சபைகளுக்கத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமாகக் காணப்படுவதாலும் கடந்த முறை தெரிவான உறுப்பினர்களின்  தொகையிலும் பார்க்க இரண்டு மடங்கு உறுப்பினர்கள் தெரிவாகுவார்கள் என்ற காரணத்தினாலுமே என்ற காரணத்தினாலுமே குறித்த யோசனையை அரசு முன்வைத்துள்ளது.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பால் அதிக பிரச்சனை ஏற்ப்படுவதாகவும் உள்ளூராட்சித்திருத்தச் சட்டவரைவில் உறுப்பினர்களின் எண்ணிக்ககை குறைப்பு யோசனையை முன்மொழிய வேண்டும் எனவும் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன இமைச்சரவைக் கூட்டத்தின் போது  வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: