சீனிக்கான வரியை குறைத்தன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை – நிதி அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 13th, 2021

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியை குறைத்தன் ஊடாக, அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல  தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த வரி திருத்தம் ஊடாக அரசாங்கத்துக்கு 15.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சீனி இறக்குமதியின்போது 15.9 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஜே.வி.பி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுதாக்கல் செய்துள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபரும், பிரதமர், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பெயரிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: