நாட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை!

Wednesday, June 22nd, 2016
இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடமொன்றிட்கு 3 மில்லியன் கொள்திறன் டயர்களை உற்பத்தி செய்யும் நோக்கில் அமைக்கப்படவுள்ளது. முதலீட்டு சபையின் திட்டத்திற்கு அமைய ஹொரண, கோனபொல பிரதேசங்களில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய உற்பத்தி மற்றும் மீள் நிரப்பப்பட்ட இறப்பர் டயர்கள், குழாய் ஏற்றுமதிகளில் வருடமொன்றுக்கு 471 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுகின்றது. இது இலங்கையின் குழாய் ஏற்றுமதியில் 61.9 வீதம் என்றும்

குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த துறையின் தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 75 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் குறித்த தொழிற்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: