யாழ்ப்பாணத்தில் மாமரங்கள் பூத்துக் காய்க்கின்றமை முன்னரைவிட இந்த வருடம் அதிகம்!

Wednesday, May 9th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்தமுறை போகத்தின்போது மாமரங்கள் அதிகளவில் பூத்துக் காய்த்துள்ளன. கடுமையான வறட்சித் தாக்கத்தால்தான் இந்த மாமரங்கள் கூடுதலாகப் பூத்துக் காய்த்துள்ளன என்று விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

மாமரங்கள் பூத்த நேரத்தில் கடுமையான வறட்சி நிலவியது. அதன் தாக்கத்தால் மாவிலை தாக்கி நோயின் பாதிப்புக்கு இலக்காகின. ஆனாலும் இந்த நோய்த்தாக்கம் மாமரங்களில் வழமையாகப் பூத்துக் காய்க்கும் சமயங்களில் ஏற்படுவது வழக்கம்.

இந்த நோய்த்தாக்கத்தால் பூக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த மாதத்தில் பெய்த மழையால் இந்த நோய்த்தாக்கம் முற்றாக நீங்கிவிட்டன. தொடர்ச்சியான வறட்சியின் தாக்கத்தால் தான் மாமரங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் காய்க்கும் தன்மை அதிகரித்துக் காணப்பட்டது.

குடாநாட்டில் பரவலாக அதிகமான மாமரங்கள் இந்தமுறை கூடுதலாக பூத்துக் காய்த்துள்ளன என்று விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

அநேகமான இடங்களில் கறுத்தக்கொழும்பான், விளாட் ஆகிய இன மாமரங்கள் அதிகமாகக் காய்த்துள்ளன.

இந்த மாம்பழங்கள் இந்த மாதக் கடைசியில் கூடுதலாகச் சந்தைக்கு வந்தால் அவற்றின் விலை சரிந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: