பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒதுக்க நடவடிககை – அமைச்சர் காமினி லொக்கு பண்டார அறிவிப்பு!
Wednesday, March 10th, 2021
இலங்கையில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒன்றை ஒதுக்கவேண்டுமானால் அதுதொடரடபான கோரிக்கையொன்று முன்வைக்கப்படுமாயின், ஆராயமுடியும் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார புகையிரதங்களில் பெண்களுக்கு தனிப்பெட்டி ஒன்றின் அவசியம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் போதே போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்கு பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தெந்த வழிகளில் பயணிக்கும் ரயில்களில் பெண்களுக்கு மட்டும் தனிப்பெட்டியை ஒதுக்கவேண்டுமென கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்றும் இல்லையேல், பெண்கள் மட்டுமே பயணிக்கும் முழு பெட்டியொன்றை ஒதுக்கவேண்டுமா? என்றும் கோரியிருந்த அமைச்சர் காமினி லொக்கு பண்டார ஏவவாறானாலும் அதற்கும் நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


