பெண்களுக்கான தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் வசதிகள் மேம்படுத்தத் திட்டம்!

Thursday, July 26th, 2018

வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு மத்திய நிலையங்களில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் உள்ள வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்காக பாதுகாப்பு வழங்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக women In Need மற்றும் Jaffna Social Action Center ஆகிய நிறுவங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த மத்திய நிலையங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான பணியாளர் சபை மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கத்தினால் வழங்குவதற்கு என்று மகளீர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: