வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாக அமையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Saturday, September 30th, 2023

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

நாடாளுமன்ற தெரிவுக்குழு பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும். அவை அனைத்தும் மிக முக்கியமானவை. அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து விடயங்களையும் நடைமுறை ரீதியில் செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு வருமானம் தேவைப்படுகின்றது. அதேபோல பொருளாதாரம் தொடர்பில் தற்போது அனைவரும் பாரிய அழுத்தத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும். இறுதிக்கட்ட செயற்றிட்டங்களுக்கு செல்வதற்கு முன்னதாக வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதையே நாங்கள் சிந்திக்கின்றோம்.

பகுதி பகுதியாக வரியைச் செலுத்தும் வாய்ப்பை நாங்கள் அவர்களுக்கு வழங்குகின்றோம். அதேபோல வரி செலுத்தாதோரின் வங்கிக் கணக்கை நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் - நிதி அமைச்சின் செயலாளர் எஸ்...
இலங்கை - பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வ...
இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விசேட கலந்துரையாடல் - பாகிஸ...

உலகப் போராட்ட வரலாறுகளில் எங்குமே நடந்திருக்காத அர்ப்பணங்களை ஈழப்போராட்டத்தில் ஆற்றிய நம் தலைவர்கள்!...
ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டமா அதிபருக்கும் பிரதிகள் வழங்கப்...