புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் மாயம்!
Monday, August 22nd, 2016
நேற்றைய தினம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவனைக் காணவில்லை என மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நுவரெலியா – நோர்வூட் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சிறுவன் தன்னுடைய மூத்த சகோதரியுடன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புலமைப்பரிசில் பரீட்சை நிமித்தம் சென்றதாகவும், அதன் பின்னரே காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைவாகவே அதிபர்கள் செயற்பட வேண்டும் - பாடசாலை அதிபர்களிடம் இலங்கை ஆசிரிய...
யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு!
விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் !
|
|
|


