புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை – மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க தீர்மானம்!
Wednesday, September 18th, 2024
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17) விசேட விசாரணை நடத்தப்பட்டதாகவும், பரீட்சை இரத்து செய்யப்பட மாட்டாது எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக இதுவரை தெரியவரவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில், நேற்று காலை வினாத்தாளை தயாரித்த அதிகாரிகள் சபையுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.
000
Related posts:
புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்!
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் ...
அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்க...
|
|
|


