எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Monday, October 18th, 2021

தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நிதி அமைச்சு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கடந்த மூன்று வருடங்களின் பின்னர் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, உலக சந்தையில் பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ டீ ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை 82.28 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: