அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Monday, July 18th, 2022

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப அலுவலகங்களை நிறுவுவதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர, தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்கமைய,ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: