புரட்சியாளர் காஸ்ட்ரோ ஒரு அடையாளச் சின்னம் – ஜனாதிபதி மைத்திரி இரங்கல்!

Sunday, November 27th, 2016

 

பிடல் காஸ்ட்ரோ ஒரு அடையாளச் சின்னத்தின் தலைவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார்.

காஸ்ட்ரோவின் மரணம் தொடர்பில், பிடலின் சகோதரரான கியூபாவின் தற்போதைய  ஜனாதிபதியான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய இந்த இரங்கலை தனது உத்தியோகப்பூர்வ  வலைத்தளமான டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். உலக புரட்சியின் சின்னமாக திகழ்ந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் ஆத்மா சாந்திக்காக தான் பிரார்த்திப்பதாக மைத்திரி தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

#RaulCastro announces the death of his brother #FidelCastro #FidelisDEAD #lka #srilanka #Cubapic.twitter.com/bu0d4MzM4B

— Truth First – Lanka (@ApiWenuwen) November 26, 2016

சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டு இருந்தார், இந்த நிலையிலேயே பிடல் காஸ்ட்ரோ காலமானார். கடந்த 2008ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ, தனது பதவியில் இருந்து விலகினார்.

தனது நாட்டுக்காகவும் மனித இனத்துக்காகவும், இந்தப் பூமிக்காகவும் கியூபா நாட்டின் ஒவ்வொருவரும் தமது கடைசி மூச்சு இருக்கும் வரை போராட வேண்டும் எனக் கூறிய மாமனிதர் தான் பிடல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

359639617861582890pres5

Related posts: