சிறுகண் வலை மீன்பிடியால் சிறிய வகை மீன்கள் நாசம் – தடுத்து நிறுத்துமாறு மீனவர் சங்கங்கள் கோரிக்கை!

Friday, July 27th, 2018

வடக்கு மாகாணத்தில் சிறுகண் வலை இழுவைப் படகுகளில் அகப்படும் சிறிய மீன் இனங்கள் அசைவம் உண்ணும் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுகின்றதே தவிர வேறு எவற்றுக்கும் பயன்படுவதில்லை. இந்தச் செயற்பாடு மூலம் மீன் இனங்கள் அழிக்கப்படுவதே உண்மை என்று மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடல் என்பது இயற்கை கொடுத்த வரம். அங்கு விளையும் கடல் மீன் இனங்கள் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர். ஆகவே கடல் வளத்தை அழியாமல் பாதுகாக்க மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மீன்கள் முட்டையிடும் காலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறுகண் வலை மற்றும் இழுவைப் படகுகளில் சிக்கும் சிறு மீன் குஞ்சுகளால் மீன் இனம் அழிக்கப்படுகின்றது. வலைகள் மூலம் ஒரே தடவையில் அள்ளப்படும் மீன் இனங்களில் பெரிய மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் மீதமாக உள்ள குஞ்சுகள் உள்ளுர் சந்தைகளிலும் கோழி, வாத்து, நாய் போன்ற கால்நடைகளுக்கு தீவினமாகப் பயன்படுகின்றது.

இந்த குஞ்சு மீன் இனங்கள் பிடிக்கப்படாமல் இருந்தால் கடலின் மீன் வளம்  அதிகரிக்கும். நீலக்கால் நண்டு, சிங்கி இறால் நண்டு இவை அதிக ஏற்றுமதி வருவாயைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

மீன் குஞ்சு இனங்களை பிடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றபோதும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: