புனரமைக்கப்படுகிறது புளியங்கூடல் பொதுச்சந்தை : எழுவைதீவு மக்களின் கோரிக்கைக்கும் தீர்வு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட புளியங்கூடல் பொதுச்சந்தை 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச சபையின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் எழுவைதீவு மக்களின் கோரிக்கையான உழவு இயந்திரங்களும் கொள்வனவு செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
பல்வேறு தேவைப்பாடுகளுடன் இருந்துவந்த புளியங்கூடல் பொதுச்சந்தையை புனரமைத்து தருமாறு குறித்த சந்தை வியாபாரிகளும் பொதுமக்களும் அமம்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தையின் அபிவிருத்தியை மேற்கொள்ள நாம் பலவழிகளிலும் முயற்சி செய்து வந்திருந்த நிலையில் தற்போது LDSP திட்டத்தின் கீழ் அதற்கான நிதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் குறித்த சந்தை தொகுதியை நவீன வசதிகளுடன் புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று எழுவைதீவு மக்களின் கோரிக்கையான உழவு இயந்திரங்களும் கொள்வனவு செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. குறிப்பாக எழுவைதிவு மக்களின் பெரும் குறையாக இருந்துவரும் கட்டடப் பொருட்களை இறங்குதுறையிலிருந்து எடுத்துச் செல்வதில் காணப்பட்ட போக்குவரத்து வசதியின்மையை நீக்கும் வகையில் சுமார் 2.9 மில்லியன் நிதியில் உழவு இயந்திரங்கள் கொள்வனவு செய்து கொடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது நிலைப்பாடாக உள்ளது.
அந்தவகையில் எமது ஊர்காவற்றுறை பிரதேச மக்களின் நலன்களை நாம் முடியுமானவரை நிவர்த்திசெய்துகொடுத்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|