புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்!
Monday, April 19th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் அலுவலக ஊழியர்களும் புத்தாண்டில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரதமரின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.
குறித்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, மேலதிக செயலாளர்கள், சிரேஷ்ட உதவி செயலாளர்கள் உள்ளிட்ட பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் கௌரவ பிரதமரின் கீழுள்ள அமைச்சுக்களின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பட்டதாரிகளுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது - தேசிய பட்டதாரிகள் மையம் தெரிவிப்பு!
நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் - வீடுகளை எரித்தவர்கள் நாடாளுமன்றுக்கு வருகைத...
நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் பந்துல எடுத்துரைப்பு!
|
|
|


