புதுவருட விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துங்கள் – பொதுமக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்!

Thursday, December 31st, 2020

சுகாதார வழிகாட்டல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன விருந்துபசாரங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் நோய் தொற்றுடனேயே, 2021 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதால் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் சந்தைகளில் பொருட்கொள்வனவின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 9 மாதங்களாக நாட்டில் கொரோனா தொற்று காணப்படுகின்ற நிலையில், விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: