புதிய வாகனங்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கான சுங்க வரி 2 இலட்சம் தொடக்கம் 4 இலட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் டொயொட்டோ பிரீமியோவின் சுங்க வரி 3 இலட்சத்து 84 ஆயிரத்து 27 ரூபாவாகவும், டொயொட்டோ எலியன் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 570 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஹொன்டா வெஷலின் சுங்க வரி 2 இலட்சத்து 20 ஆயிரத்து 222 ரூபாவாக அதிகரிக்கபட்டுள்ளதென சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் சுங்க பேச்சாளர் தர்மசேன கஹண்டவ தெரிவிக்கையில், வாகனங்களுக்கான மதிப்பீடுகள் சுங்கத் திணைக்களத்தால் இதுவரை உயர்த்தப்படவில்லை.வாகன உற்பத்தியாளர்கள் 2017 ஆம் ஆண்டுக்காக உற்பத்தி செய்துள்ள வாகனங்களின் மேலதிக அம்சங்களுக்காக குறித்த விலை அதிகரிப்பினை செய்துள்ளனர்.
மேலும் விலை உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களுக்கான விலைப்பட்டியலினை குறித்த வாகன நிறுவனங்கள் அவர்களது இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி குறித்த விலை அதிகரிப்பானது திடீர் முடிவாக எடுக்கப்பட்டதல்ல, எனவும் தெரிவித்துள்ளார்.இந்த விலை அதிகரிப்புகள் தொடர்பில் ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|