யூரியா இறக்குமதிக்கு இந்தியாவிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் – ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 7th, 2022

யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கு இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் (Exim Bank) இருந்து கடன் பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 2022/23 பெரும் போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடம் இருந்து பெற்றுத்தருவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்திருந்தது.

குறித்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, 2022/23 பெரும்போகத்திற்காக விவசாயிகளுக்கு 150,000 மெட்ரிக் டன் யூரியா, 45,000 மெட்ரிக் டன் MOP (மியுரேட் ஒஃப் பொஸ்பேட்) மற்றும் 36,000 மெட்ரிக் டன் TSP (ட்ரிபல் சுப்பர் பொஸ்பேட்) உரங்கள் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உரத் தொகையை வரையறுக்கப்பட்ட லங்கா உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரநிறுவனம் ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: