புதிய பயணிகள் நிழற்குடைக்கான அடிக்கலை முன்னால் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் நாட்டிவைத்தார்!
Thursday, November 8th, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் அவர்களின் நீதி ஒதுக்கீட்டில் ஆன செயல்திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறை படுத்தபட்டு வருகின்ற நிலையில் புதிய பயணிகள் நிழற்குடை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று பூநகரி வாடியடி சந்தியில் இடம்பெற்றது
ஏற்கனவே பூநகரி பிரதேசத்திற்கான இரண்டு நிழற்குடைகளை அமைப்பதற்கான நீதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வுகளே இன்று நடை பெற்றது ஏற்கனவே பூநகரி வாடியடி பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்று பயணிகளின் சீரான பாவனைக்கு ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து முன்னால் மாகணசபை உறுப்பினர் வை தவநாதன் இந்த பேருந்து நிழற்குடை அமைப்புக்கான நிதியினை ஒதுக்கீடு செய்து இருந்தார் இதற்கு அமைவாக குறித்த நிழற்குடைகளுக்கான அடிக்கலினை முன்னால் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் அடிக்கல்லினை நாட்டி வைத்து பணிகளை விரைவாக செயற்படுத்தல் தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்கினார் இதே வேலை பூநகரி பிரதேசத்திற்கான இரண்டாவது நிழற்குடை முழங்காவில் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் அமைக்க பட்டு வருகிறது முழங்காவில் இரணைமாத நகர் போன்ற கிராம மக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக இந்த நிழற்குடை மாகாணசபை உறுப்பினர் தவநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கபட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

Related posts:
22இல் சைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை!
மின்சார சபைக்குள் மோசடிகள் தாராளம் - “கபே” குற்றச்சாட்டு!
இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் - எரிசக்தி அமைச்சு அறிவிப்...
|
|
|


