22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Saturday, March 9th, 2024
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கூட்டுறவு பணியாளர் உயர்தர கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!
அரச நிறுவனங்களில் மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப...
உள்ளூராட்சி தேர்தல் - சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதி...
|
|
|


