புதிய நாடாளுமன்ற கூட்டத்தின்போது புதிய அரசின் கொள்கை அறிக்கையை அறிவிப்பார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையினை எதிர்வரும் வியாழக்கிழமை 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்க உள்ளார்.
புதிய அரசின் கன்னி கூட்டத் தொடருக்கு பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி தலைமை தாங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்போது அரசியல் அமைப்பின் 33 (2) வது பிரிவில் வழங்கப்பட்டுள்ளபடி புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை அவர் அன்று முன்வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில், புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் வியாளனன் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுடவுள்ளார். அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கவுள்ளனர்
இதன்பின்னர் துணை சபாநாயகர் மற்றும் குழுக்களின் துணைத் தலைவர் நியமிக்கப்படவுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
Related posts:
அரிசியின் விலை மேலும் குறையுமாம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
ரயில் என்ஜின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!
மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு - யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள ...
|
|