வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை மறுப்பு!

Wednesday, June 22nd, 2016

மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்கள் இருவருக்கும் பிணை வழங்கமுடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை. எம். எம். றியால் தெரிவித்தார்.

மாணவி வித்தியா வண்புனர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன நிலையில் வித்தியாவின் தாயார் சந்தேகநபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தபட்ட வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் சட்டதரணி ஊடாக பிணை மனு கோரினர். இதன் போது சாட்சியினை அச்சுறுத்திய வழக்கில் நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கமுடியாது எனவும் இது தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோரமுடியும். எனவும் நீதவான் தெரிவித்தார்.

Related posts:

நாட்டின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சர...
இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தது நைட்ரஜன் யூரியா திரவ பசளை தொகுதி – விமான நிலையத்தில் துறைசார் அ...
மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய...