ரயில் என்ஜின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!
Tuesday, August 1st, 2017
உரிய விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ரயில் என்ஜின் சாரதிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் என்ஜின்களில் காணப்படும் சில இயந்திரக் கோளாறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ரயில் என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கப் பிரதிநிதி இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Related posts:
பொறுப்புக்கூறல் அவசியம் - கனடா வலியுறுத்து!
வடமராட்சி கிழக்கில் சட்டமுரணாகக் கடலட்டை பிடிப்போரை அகற்றக்கோரி வழக்குத் தாக்குதல்!
தடுப்பூசி ஏற்றாவிட்டால் தொலைபேசி துண்டிப்பு – சம்பளமும் இரத்து !
|
|
|


