புதிய நடைமுறையில் அரச பணியாளர்களுக்கு பதவி உயர்வு!
Saturday, November 26th, 2016
அரச சேவையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு புதிய நடைமுறை ஒன்றை ஆரம்பிப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்..
எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். இதற்கு முன்னர் காணப்பட்ட சேவைக் காலத்தின் அடிப்படையில் பதவி உயர்வி வழங்கும் நடைமுறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.
அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்நடவடிக்கையை முன்னெடுப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கூறினார்.

Related posts:
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்!
நாமலின் கைபேசியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!
மத வழிபாட்டு தலங்களுக்கான மின்கட்டண திருத்தத்தில் சலுகை - வற்வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும்...
|
|
|


