புதிய தலைவர் மயந்த திசாநாயக்க தலைமையில் முதன்முறை கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு!

Friday, February 24th, 2023

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தலைமையில் நேற்று (23) முதன்முறையாகக் கூடியது.

இத்தெரிவுக் குழுவினால் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க பெயர் குறித்து நியமிக்கப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க நேற்று நாடாளுமன்லில் நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போது தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்ட நிலையில், ஆளும் கட்சியினால் மயந்த திசாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பதவியில் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்கும் பொருட்டு, இது தொடர்பில் அவரை குறித்த பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்ததாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததாகவும், எதிர்க்கட்சியயின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

எதிர்கட்சியினால் வகிக்கப்பட வேண்டிய குறித்த பதவியை எதிர்க்கட்சியே பெயரிட வேண்டுமெனவும், அவ்வாறு பெயரிடப்பட்ட ஹர்ஷ டி சில்வாவை ஆளும் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: