புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை – நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Monday, July 18th, 2022

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களுக்கும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

இதன்போது புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளைதினம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, நாளைமறுதினம் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று பதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படவுள்ளார்.

இதன் படி எதிர் வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெருமா ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், நாட்டில் இன்றுமுதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆசியாவில் பிரதான ஜனநாயக நாடான இலங்கையில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும் - அமெரிக்க இராஜாங்க செய...
இலங்கை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி - இந்திய உயர்ஸ்தானிகரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட தடுப்பூச...
பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை!