புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!
Friday, January 15th, 2021
புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு பின்னர் அவர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டு தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேஜர் ஜெனரல் வசந்த மாதொல , இந்த புதிய நியமனத்திற்கு முன்பு கொஸ்கமயிலுள்ள வினியோக கட்டளைத் தளபதியாக பணியாற்றியுள்ளார். இந்நிகழ்வின்போது இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அலுவலக பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய அரசியலமைப்பிலும் ஒற்றை ஆட்சிதான் உறுதியானது: இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் – வடக்கு மாகாண முன...
கடும் வறட்சி – நீர் வற்றும் ஆறுகள்!
இராணுவம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு!
|
|
|
இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
340 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஆணையாளர்கள் - செயலாளர்களின் வசமாகின - சட்டமா அதிபரின் நிலைப்...
கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் - வடக்கின் ஆளுந...


